ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் MLA, EX-MLA சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் MLA, EXMLA சுட்டுக்கொலை

ஐதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகிய இருவரையும் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அரகு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ., சர்வேஸ்வர ராவ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவேரி சோமா ஆகிய இருவரும் தும்பிரிகுடா என்னுமிடத்தில் சென்று கொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எம்எல்ஏ.,சர்வேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். வட இந்தியாவில் அதிகம்  உலவும் மாவோயிஸ்டுகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அதிக அளவில் முயற்சிகள் எடுத்து வருகின்றது. மாவோயிஸ்டுகளின் இருப்பிடமாக கருதப்படும் ஒடிசா மற்றும் பீகாரில் உள்ள வனப்பகுதிகளில் அதிரடி  வேட்டையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை