வீதி கண்காணிப்பு ரேடாருக்கு உறை போட்ட நபர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வீதி கண்காணிப்பு ரேடாருக்கு உறை போட்ட நபர்!!

இரண்டாம்கட்ட வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் பின்னர், கண்காணிப்பு ரேடார் கருவி உடைக்கப்பட்டுவதும், சேதமாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. 
 
புதிய வேகக்கட்டுப்பாட்டு குறைக்கப்பட்டதில் இருந்து Fédération française des motards அமைப்பினர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டமும், கண்டனங்களும் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த அமைப்பைச் சேர்ந்த நபர்கள் சிலர், வீதில் உள்ள கண்காணிப்பு ரேடார் கருவிகளை உறை கொண்டு மூடியுள்ளனர். Avignon (Vaucluse) பகுதியில் உள்ள சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள பல ரேடார் கருவிகளை உறை கொண்டு மூடியுள்ளனர். 
 
அதைத் தொடர்ந்து ஜோந்தாமினர்கள் உறையை அகற்றினார்கள். இதுதொடர்பாக விசாரணைகளை ஜோந்தாமினர்கள் முன்னெடுத்துள்ளனர். பிரான்சில் ஏற்படும் விபத்துக்களில் மூன்றில் ஒன்று, அதிவேகத்தினால் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை