விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
விழிப்புணர்வுக்காக 1300 கிலோமீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர்!!

Christoph Steuernagel எனும் ஜெர்மனிய பெயர் கொண்ட இளம் தீயணைப்புபடை வீரர் ஒருவர் 1,300 கி.மீ துவிச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார். 
 
இச்சம்பவம் பிரான்சின் கிழக்கு பிராந்தியமான Munster நகரில் இடம்பெற்றுள்ளது. இவர் Grand Est மாகாணம் முழுவதுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி Colmar நகரில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். பின்னர் தனது பயணத்தை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக முடித்துள்ளார். மொத்தமாக 1300 கிலோ மீட்டர்கள் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவசரகாலத்தின் போது இதயத்துக்கு மசாஜ் செய்வது எப்படி என்பது தொடர்பாக இவர் விளக்கமளித்துள்ளார். தனது பயணத்தில் 250 தடவைகள் இந்த யுக்தியை பலருக்கு சொல்லி கொடுத்துள்ளார்.
 
 
19 வயதுடைய இளம் தீயணைப்பு படை வீரரான Christoph Steuernagel, மொத்தமாக 18 கட்டங்களாக வெவ்வேறு நகரங்களுக்கு பயணித்துள்ளார். மருத்துவப்பொருட்கள் குடிநீர் உணவு, உடை போன்றவை கொண்ட ஒரு சிறிய ரக பெட்டியினை (புகைப்படத்தை பார்க்கவும்!) துவிச்சக்கர வண்டியில் பொருத்திக்கொண்டு, அதையும் கொண்டே இந்த மூன்று வாரங்களை நிறைவு செய்துள்ளார்.
 

மூலக்கதை