ரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
ரபேல் ஊழல் விவகாரம்.... அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் மீது பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியாவின் ஆன்மாவுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார். மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர். ரிலையன்ஸ் பெயரை பரிந்துரைக்கவில்லை என மோடி அரசு கூறிவந்தது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரைத்தது என முன்னாள் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். ரபேல் ஊழல் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார்.  முன்னாள் பிரான்ஸ் அதிபரின் குற்றச்சாட்டிற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். ரபேல் ஒப்பந்தம் மாற்றப்பட்ட போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிகர், ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அனில் அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் கூறி வருகிறது. ரபேல் விமானத்தின் விலை என்னவென்றே ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை