பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
பலாத்கார வழக்கில் கைதான பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் பிஷப் பிராங்கோவை செப்.24 வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்.24-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு பிராங்கோவை மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் பிஷப் பிராங்கோவின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. பிராங்கோவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததையடுத்து குரவிலங்காடு ஆசிரமம் மற்றும் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் இடங்களுக்கு நேரடியாக அவரை அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பலாத்கார வழக்கில் நேற்று கைதான பிஷப் பிராங்கோவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை