பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்

தினகரன்  தினகரன்
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தினால் தான் இந்தியாபாகிஸ்தான் பேச்சுவார்த்தை சாத்தியம்: பிபின் ராவத்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் போலீசார் 3 பேர் கொல்லப்பட்டதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், 5 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். காவலர்கள் 3 பேர் கொலையில் 12 தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதால்,  எஞ்சிய 7 தீவிரவாதிகளை பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னதாக அம்மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் கப்ரான் மற்றும் ஹீபோரா கிராமங்களில் புகுந்த தீவிரவாதிகள், காவல்துறை சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பிர்தோஸ் அகமது, குல்தீப் சிங், காவலர் நிசார் அகமது ஆகியோரை கடத்திக் கொன்றனர்.இது குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் பதிலடி கொடுக்க இதுவே சரியான தருணம். இந்திய வீரர்கள் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பதிலடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அவர்களும் அதே போன்று வேதனையை உணர வேண்டும். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் சுதந்திரமாக ராணுவம் செயல்படுகிறது. இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார்.

மூலக்கதை