ஓட்டுனர் உரிமம் இல்லை! - காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஓட்டுனர் உரிமம் இல்லை!  காவல்துறையினருக்கு €70 இலஞ்சம் கொடுத்த நபர்!!

நேற்று வெள்ளிக்கிழமை பரிசில் நபர் ஒருவர் சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார். பின்னர் குறித்த நபர் கைது செய்யப்படுள்ளார்.
 
பரிசின் ஏழாம் வட்டாரத்தின் avenue Duquesne வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிவப்பு சமிக்ஞை விளக்கில் நிறுத்தாமல் சென்ற நபர் ஒருவரை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த சாரதியை கைது செய்தனர். விசாரணைகளில் குறித்த நபரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என தெரியவந்துள்ளது. தவிர, மதுபோதையிலும் இருந்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என யோசித்த நபர், காவல்துறையினருக்கு €70 யூரோக்கள் இலஞ்சமாக கொடுத்து, 'உங்களது கண்களை மூடிக்கொள்ளுங்கள்!' என குறிப்பிட்டுள்ளார். 
 
பின்னர் அவர், ஏழாம் வட்டார காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஓட்டுனர் உரிமம் இன்றி பயணித்தது, மது அருந்திவிட்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டது, அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியமை என பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை