இந்திய தேசிய கீதத்தை உருக்கமாக பாடிய பாக்., ரசிகர்

தினமலர்  தினமலர்
இந்திய தேசிய கீதத்தை உருக்கமாக பாடிய பாக்., ரசிகர்

துபாய் : துபாயில் நடந்து வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்.,19 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதை பார்ப்பதற்காக இந்தியா, பாக்.,ஐ சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் குவிந்திருந்தனர்.
போட்டி துவங்குவதற்கு முன் இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், மிக உருக்கமாகவும், சத்தமாகவும் இந்திய தேசிய கீத பாடலை பாடினார். இதை தானே வீடியோவும் எடுத்துள்ளார். கறுப்பு நிற ஆடை அணிந்து, கழுத்தில் பாக்., தேசியக்கொடியை அணிந்திருந்த அந்த இளைஞர் இந்திய தேசிய கீதத்தை பாடியதை அருகில் இருந்த மற்ற ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்று நடந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பாகிஸ்தான் இளைஞர் இந்தியர்களின் மனதை வென்று, பிரபலமாகி வருகிறார்.

மூலக்கதை