இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 50% குறைந்துள்ளது: ஐ.நா அறிக்கை

தினகரன்  தினகரன்
இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போரின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 50% குறைந்துள்ளது: ஐ.நா அறிக்கை

நியூயார்க்: இந்தியாவில் பல்முனை வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்போரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம்  குறைந்துள்ளதாக ஐ.நா சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச பல்முனை வறுமை பட்டியல் அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 2005-2006லிருந்து 10 ஆண்டுகளின் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்தவர்களில் சுமார் 27 கோடி பேர் வளர்ச்சியடைந்துள்ளனர்.சர்வதேச அளவில் சுமார் 130 கோடி பேர் உணவு, சுகாதாரம் உள்ளிட்ட பல்முனை வறுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமே இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில், வறுமைக்கு எதிரான நடவடிக்கைகளின் வாயிலாக கணிசமான அளவு வளர்ச்சியடைந்துள்ளது.

மூலக்கதை