RATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை! - ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
RATP அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை!  ஒரே வருடத்தில் 24 வீதத்தால் அதிகரிப்பு!!

RATP ஊழியர்கள், சாரதிகள், பயணச்சிட்டை சோதனையாளர்கள், காவலாளிகள் மீது தாக்குதல் இடம்பெறுவது கடந்த ஒரு வருடத்தில் 24 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டில் 1,230 க்கும் மேற்பட்ட உடல் சார்ந்த வன்முறைகள் RATP ஊழியர்கள் மீது பதிவாகியுள்ளது. அதேவேளை அதிகாரிகள் பயணிகள் மீது நடத்தும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. தவிர, கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. 1,230 ஊழியர்களில் 69 வீதமானவர்கள் சாரதிகளாவர். இந்த தகவலை RATP கணக்கெடுத்து, வெளியிட்டுள்ளது. குறிப்பாக பயணச்சிட்டை பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும் வாக்குவாதங்களும் வன்முறைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, பயணிகளிடம் இடம்பெறும் கொள்ளைகள், திருட்டுக்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
24 வீதமாக அதிகரித்த இந்த எண்ணிக்கை, கடந்த ஆறு வருடங்களில் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கட்கிழமை 14 ஆம் வட்டாரத்தில், பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் கைது செய்யப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை