ஜம்மு காஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாதத் தாக்குதல் 24 சதவீதம் அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாதத் தாக்குதல் 24 சதவீதம் அதிகரிப்பு

ஜம்மு: ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கையில் 2015ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாடாக இருந்தது. இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களில் 53 சதவீதம் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.உலக அளவில் ஐஎஸ், தாலிபான், அல் சபாப் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மாவோயிஸ்ட் இயக்கம் பெரிய தீவிரவாத இயக்கமாக உள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தியாவில் 860 தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் முந்தைய ஆண்டைவிட தீவிரவாதத் தாக்குதல் 24 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை