அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம் - 3 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த பெண்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் பரவும் துப்பாக்கி கலாசாரம்  3 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த பெண்

அபெர்தீன்: அமெரிக்காவின் மேரிலேண்டில் இளம்பெண் ஒருவர், சக ஊழியர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இறுதியில் அந்த பெண் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் பால்டிமோர் மாவட்டத்தை சேர்ந்தவர் சினோசியா மோஸ்லே (26). இவர், அபெர்தீன் பகுதியில் உள்ள மருந்து கிடங்கில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை சினோசியா வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்போது, திடீரென கைப்துப்பாக்கியை எடுத்த அவர் அங்கிருந்த சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர். பின்னர், மோஸ்லே தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டது.  மோஸ்லே பயன்படுத்திய துப்பாக்கி அவரது பெயரில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடப்பது சாதாரணமாகி விட்டது. இருப்பினும், இளம்பெண் ஒருவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை