விஜய் ஹசாரே டிராபி : சர்வீசஸ் அணியை வீழ்த்தியது தமிழகம்

தினகரன்  தினகரன்
விஜய் ஹசாரே டிராபி : சர்வீசஸ் அணியை வீழ்த்தியது தமிழகம்

சென்னை: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 83 ரன் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை வீழ்த்தியது.ஐஐடி கெம்பிளாஸ்ட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சர்வீசஸ் முதலில் பந்துவீசியது. தமிழகம் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் என்.ஜெகதீசன் 133 ரன் (130 பந்து, 17 பவுண்டரி), அபிநவ் முகுந்த் 69 ரன் (89 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். கேப்டன் விஜய் ஷங்கர் 5, அனிருத் 15 ரன்னில் வெளியேறினர்.அதிரடியாக விளையாடிய இந்திரஜித் 76 ரன் (58 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), அபராஜித் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து கடினமான இலக்குடன் களமிறங்கிய சர்வீசஸ் அணி 46 ஓவரில் 232 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. வர்மா 60, கேப்டன் ரஜத் பலிவால் 52, அர்ஜுன் ஷர்மா 46 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமான ரன் குவிக்கத் தவறினர். தமிழக பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 10 ஓவரில் 1 மெய்டன் உட்பட 38 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். அபராஜித் 3, விக்னேஷ், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 83 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தமிழக அணி 4 புள்ளிகளை தட்டிச் சென்றது.

மூலக்கதை