வியட்நாம் அதிபர் டிரான் மரணம்

தினகரன்  தினகரன்
வியட்நாம் அதிபர் டிரான் மரணம்

ஹனாய்,: உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்த வியாட்நாம் அதிபர் டிரான் நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 61. வியட்நாம் அதிபராக கடந்த 2016ம் ஆண்டு பொறுப்பேற்றவர் டிராய் டாய் குவாங் (61). தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்களில்  ஒருவராக கருதப்படுபவர். கடந்த சில நாட்களாகவே இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக வெளிநாடுகள் மற்றும் ராணுவ மருத்துவமனையிலும் டிராய்க்கு  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஹனாயில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். இதனால், வியட்நாமில் சோகம் நிலவுகிறது.

மூலக்கதை