உடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்!

உடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் மரணம் அடைந்தார்.

வியட்நாம் அதிபர் ட்ரான் டாய் குவாங் ( வயது 61) அந்த  நாட்டின் ராணுவ மருத்துவமனையில்  உடல்நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்,  ட்ரான் டாய் குவாங் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ட்ரான் டாய் குவாங் 2016-ம் ஆண்டு  முதல் வியட்நாமின் அதிபராக பதவிவகித்து வந்தார்.

வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் பி.எச்.டி பட்டம் பெற்றவர் ஆவார்.

இவர் கடந்த 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை மந்திரியாகவும், பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் மந்திரியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை