ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது!

ரயில்களில் விற்கப்படும் டீ,  காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

டீ பையுடன் கொடுக்கப்படும் 150 மி.லி. டீ மற்றும் உடனடி காபித் தூளுடன் கொடுக்கப்படும் காபி ஆகியவற்றின் விலையை ரூ.7-இல் இருந்து ரூ. 10- ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தயாரித்துக் கொண்டு வரப்படும் டீயின் விலை ரூ. 5 -ஆகவே நீடிக்கிறது. ரயில்வே உணவு ஒப்பந்த நிறுவனமான ஐஆர்சிடிசி இந்த விலை உயர்வு திட்டத்தை ரயில்வே நிர்வாகத்திடம் முன்வைத்தது. அதற்கு ரயில்வே துறையும்  ஒப்புதல் வழங்கியது.

ஒரு முறை உபயோகிக்கும் குவளைகளைப் பயன்படுத்தி டீ விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு ஏற்ப உரிமத் தொகையை உயர்த்துமாறு அனைத்து மண்டலங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. 

சுமார் 350 ரயில்களில் ஐஆர்சிடிசி உணவகம் உள்ளது. ராஜஸ்தானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் உணவுக்கு முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படுவதால் அந்த ரயில்களில் இந்த விலை உயர்வு இல்லை.

மூலக்கதை