செப்டம்பர் 29-ந் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட உத்தரவு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
செப்டம்பர் 29ந் தேதி சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட உத்தரவு!

செப்டம்பர் 29 ம் தேதியை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், மத்திய அரசின் உத்தரவுப்படி செப்.29 சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட வேண்டும்.

இதனை முன்னிட்டு கருத்தரங்குகள், சிறப்பு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக கண்காட்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி, அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலக்கதை