‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018

தினமலர்  தினமலர்
‘டுவென்டி–20’ மழையால் ரத்து | செப்டம்பர் 22, 2018

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டி மழையால் பாதியில் ரத்தானது.

இலங்கை சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1–0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பீல்டிங் தேர்வு செய்தார்.

இலங்கை அணிக்கு மெண்டிஸ் (1), கேப்டன் ஜெயகனி (21), தில்ஹாரி (3) விரைவில் வீழ்ந்தனர். இலங்கை அணி 7.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை நீடிக்க போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்தியா சார்பில் அருந்ததி, தீப்தி, பூணம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை