வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடக்குமா? இந்தியா மறுபரிசீலனை

தினமலர்  தினமலர்
வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடக்குமா? இந்தியா மறுபரிசீலனை

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளால் போலீசார் கடத்தி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
''இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சை மீண்டும் துவக்க வேண்டும்,'' என, பாகிஸ்தான் பிரதமர்,இம்ரான் கான் விடுத்த அழைப்பை, மத்திய அரசு ஏற்றுள்ளது. இந்த மாத இறுதியில், அமெரிக்காவின், நியூயார்க் நகரில் நடக்கும், ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தின்போது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மறுபரீசீலனை:

இந்நிலையில், காஷ்மீரில் 3 போலீசாரை கடத்தி சென்று பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இதனையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை