பாகிஸ்தான் அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்துவதா? மத்திய அரசு மறுபரிசீலனை

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் அமைச்சருடன் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பேச்சுவார்த்தை நடத்துவதா? மத்திய அரசு மறுபரிசீலனை

டெல்லி: பாகிஸ்தான் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதா என்பது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்யாததால் சந்திப்பை ரத்து செய்வது பற்றி மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை வீரர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதால் இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. தெற்கு காஷ்மீரில் 3 காவல் அதிகாரிகள் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டனர். இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சை மீண்டும் துவக்க வேண்டும் என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ள அழைப்பை மத்திய அரசு நேற்று ஏற்றுது. இந்த மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும், ஐ.நா பொதுச் சபை கூட்டத்தின்போது, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகருக்கு, செப்., 24ல் செல்கிறார். வரும்,27ல், சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான மதிய உணவு விருந்து மற்றும் சந்திப்பிலும் அவர் பங்கேற்கிறார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனான சந்திப்புக்கான தேதி மற்றும் நேரம், அவர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை