55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது அரசு

தினமலர்  தினமலர்
55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது அரசு

மும்பை : இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேலாக நிதி நிலை அறிக்­கை­களை சமர்ப்­பிக்­காத நிறு­வ­னங்­கள் உட்­பட, 55 ஆயி­ரம் நிறு­வ­னங்­களின் பதிவை நீக்­கி­யுள்­ளது, மத்­திய அரசு.

ஒரு நிறு­வ­னம், முற்­றாக செயல்­ப­டா­மல் இருந்­தாலோ அல்­லது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மேல், நிதி நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­யா­மல் இருந்­தாலோ, அந்த நிறு­வ­னத்­தின் பதிவு ரத்து செய்­யப்­படும். இதன்­படி, கடந்த ஆண்டு டிசம்­பர், 12ம் தேதி வரை, 2 லட்­சத்து, 26 ஆயி­ரத்து, 166 நிறு­வ­னங்­களின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டது. தற்­போது, இரண்­டாம் கட்­ட­மாக, 55 ஆயி­ரம் நிறு­வ­னங்­களின் பதிவு அதி­ர­டி­யாக ரத்து செய்­யப்­பட்­டு உள்­ளது.

இது குறித்து, மத்திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை இணை அமைச்­சர், பி.பி.சவுத்ரி கூறி­ய­தா­வது: முதற்­கட்­ட­மாக பதிவு ரத்து செய்­யப்­பட்ட, 2.26 லட்­சம் நிறு­வ­னங்­களில் பல, நிதி நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­யா­தவை. ஆனால், பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் போலி நிறு­வ­னங்­கள் ஆகும். இவற்­றில், 400க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு, ஒரே ஒரு அறை மட்­டுமே இருந்­தது.

தற்­போது இரண்­டாம் கட்­ட­மாக, 55 ஆயி­ரம் நிறு­வ­னங்­களின் பதிவு ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. நட­வ­டிக்­கை­கள் மேலும் தொட­ரும். நிதி முறை­கேடு, போதை பொருட்­க­ளுக்கு பணம் வழங்­கு­வது, சட்­டத்­துக்கு புறம்­பான வழி­களில் செயல்­ப­டு­வது போன்­ற­வற்­றில் ஈடு­பட்டு வரும் நிறு­வ­னங்­கள் மீது, அரசு தகுந்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

‘கார்ப்­ப­ரேட்’ என்ற பெயரை தவ­றாக பயன்­ப­டுத்­து­வதை அரசு அனு­ம­திக்­காது. சட்­டத்­துக்கு புறம்­பாக செயல்­ப­டு­வ­தாக தெரிய வந்த சில நிறு­வ­னங்­க­ளுக்கு, விளக்­கம் கேட்டு கடி­தம் அனுப்பி உள்­ளோம். அதற்கு, அவை என்ன பதி­ல­ளித்­துள்ளன என்­பதை ஆய்வு செய்து வரு­கி­றோம். ஆய்­வுக்கு பின், அவற்­றின் மீது நிறு­வன சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை