‘ப்ளூடார்ட்’ நிறுவனத்தின் புதிய இலக்கு

தினமலர்  தினமலர்

சென்னை : ‘லாஜிஸ்­டிக்ஸ்’ நிறு­வ­ன­மான, ‘ப்ளூ­டார்ட்’ இந்­தாண்டு இறு­திக்­குள், தன் சேவைக்கு, 20 ஆயி­ரம் அஞ்­சல் குறி­யீ­டு­களை இலக்­காக நிர்­ண­யித்­துள்­ளது.

ப்ளூ­டார்ட் லாஜிஸ்­டிக்ஸ் நிறு­வ­னத்­தின் மேலாண்மை இயக்­கு­னர், அனில் கண்ணா இது குறித்து கூறி­ய­தா­வது: இந்­தாண்­டின் துவக்­கத்­தில், எங்­கள் சேவையை, 6,000 அஞ்­சல் குறி­யீ­டு­க­ளி­லி­ருந்து, 17 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட அஞ்­சல் குறி­யீ­டுக­ளுக்கு விரி­வுப்­ப­டுத்­தி­யுள்­ளோம். ஆண்­டின் முடி­வுக்­குள், 20 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட அஞ்­சல் குறி­யீ­டு­க­ளுக்கு சேவையை விரி­வுப்­ப­டுத்த உள்­ளோம். செப்., மாதம் வரை, பல்­வேறு மாநி­லங்­களில் உள்ள, 16 நக­ரங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­களில் ப்ளூ டார்ட் நிறு­வ­னம், 100 சத­வீத சேவையை வழங்­கி­யுள்­ளது.

அர­சின், ‘மேக் இன் இந்­தியா’ இலக்கு மற்­றும் பல்­வேறு மாநில முன் முயற்­சி­க­ளுக்கு உட்­பட்டு, வர்த்­த­கத்தை மேலும் எளி­தாக்கி, நாடு முழு­வ­தும் வேலை­வாய்ப்பை அதி­க­ரித்­தலே எங்­கள் நிறு­வ­னத்­தின் செயல்­திட்­டம். விரை­வில், 939 புதிய மையங்­களை கிரா­மப்­பு­றங்­களில் துவங்க உள்­ளோம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை