அதிர்ச்சி தந்த பங்குச்சந்தை வீழ்ச்சி; 1,000 புள்ளிகள் சரிவு

தினமலர்  தினமலர்
அதிர்ச்சி தந்த பங்குச்சந்தை வீழ்ச்சி; 1,000 புள்ளிகள் சரிவு

மும்பை : நேற்று, வீட்டு வசதி கடன் நிறு­வன பங்­கு­கள் விலை சரி­வால், பங்­குச் சந்தை வர்த்­த­கத்­தின் இடையே, ‘சென்­செக்ஸ்’ 1,000 புள்­ளி­கள் சரிந்­தது.

இரண்டு நாட்­க­ளாக, கச்சா எண்­ணெய் விலை குறைந்து, ரூபாய் வெளி­ம­திப்பு ஏற்­றம் கண்­டதை அடுத்து, நேற்று காலை­யில் பங்கு வர்த்­த­கம் நன்கு இருந்­தது.

ஐ.எல்., அண்டு எப்.எஸ்., :
அதன் பின் ஏற்­பட்ட சரி­விற்கு, அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யைச் சேர்ந்த, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழு­மத்­தின் வாராக் கடன் பிரச்னை முக்­கிய கார­ண­மாக அமைந்­தது. இக்­கு­ழு­மத்­தின், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., தமிழ்­நாடு பவர் நிறு­வ­னம் மீது, தேசிய நிறு­வ­னங்­கள் சட்ட தீர்ப்­பா­யத்­தில், திவால் நட­வ­டிக்கை பணி­கள் துவங்­கி­யுள்ளன.

மேலும், இக்­கு­ழு­மத்­தின் வாராக் கடன் கார­ண­மாக, அதன் கடன் தகுதி மதிப்­பீட்டை, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ குறைத்­துள்­ளது. கடந்த இரு மாதங்­களில், இரண்டு முறை மதிப்­பீடு குறைக்­கப்­பட்­ட­தால், இக்­கு­ழும நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை குறைந்­தது. ‘இந்தியா புல்ஸ்’ இந்­நி­லை­யில், வீட்டு வசதி கடன் துறை­யைச் சேர்ந்த, டி.எச்.எப்.எல்., நிறு­வ­னத்­தின் பங்கு விலை, திடீ­ரென மள­ம­ள­வென சரி­வ­டைந்­தது.

இந்­நி­று­வ­னம், நிதி நெருக்­கடி கார­ண­மாக, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு வட்டி வழங்­கா­மல் இழுத்­த­டிப்­ப­தாக வெளி­யான தக­வ­லால், இதன் பங்கு விலை, 60 சத­வீ­தத்­திற்­கும் மேலாக குறைந்­தது. இத­னால், இந்­நி­று­வ­னம், அதன் சந்தை மூல­த­னத்­தில், 10 ஆயி­ரம் கோடி ரூபாயை இழந்­தது. இதன் தாக்­கத்­தால், வீட்டு வசதி கடன் துறை­யைச் சேர்ந்த பல நிறு­வ­னங்­களின் பங்­கு­களை, முத­லீட்­டா­ளர்­கள் விற்­கத் துவங்­கி­னர்.

ரிசர்வ் வங்கி :
‘இந்­தியா புல்ஸ் ஹவு­சிங் பைனான்ஸ்’ நிறு­வன பங்கு விலை, 35 சத­வீ­தம் சரி­வ­டைந்­தது. ‘கிருஹ் பைனான்ஸ், கேன் பின் ஹோம்ஸ், பி.என்.பி., ஹவு­சிங் பைனான்ஸ்’ ஆகிய நிறு­வ­னங்­களின் பங்­கு­கள் விலை, முறையே, 17.66, 14.55 மற்­றும் 9.23 சத­வீ­தம் சரி­வ­டைந்­தன.இத்­து­டன், ரிசர்வ் வங்கி நட­வ­டிக்­கை­யால், யெஸ் பேங்க் பங்­கும், 29 சத­வீ­தம் சரிந்­தது. இத­னால், சென்­செக்ஸ், 1,128 புள்­ளி­கள் வரை வீழ்ச்சி கண்டு, 36,000 புள்­ளி­க­ளுக்­கும் கீழாக சரி­வ­டைந்­தது. தேசிய பங்­குச் சந்­தை­யின், ‘நிப்டி’ குறி­யீடு, 368 புள்­ளி­கள் குறைந்து, 11,150 புள்­ளி­க­ளுக்­கும் கீழாக இறங்­கி­யது

நிதி நெருக்கடி :
இந்­நி­லை­யில், டி.எச்.எப்.எல்., நிறு­வ­னம், நிதி நெருக்­கடி குறித்து வெளி­யான தக­வலை மறுத்­தது. வலு­வான நிதி­யா­தா­ரத்­து­டன் உள்­ள­தாக நிறு­வ­னம் தெரி­வித்­ததை அடுத்து, அதன் பங்கு விலை சரிவு தடுக்­கப்­பட்­டது. இதைத் தொடர்ந்து, இதர நிறு­வ­னங்­களின் பங்கு விலை சற்று உயர்ந்­தது. இதை­ய­டுத்து, சென்­செக்ஸ் ஓர­ளவு ஏற்­றம் கண்­டது. வர்த்­த­கத்­தின் இறு­தி­யில், 279.62 புள்­ளி­கள் சரி­வு­டன், 36,841.60 புள்­ளி­களில் நிலை கொண்­டது. தேசிய பங்­குச் சந்­தை­யின் நிப்டி, 91.25 புள்­ளி­கள் சரிந்து, 11,143.10 புள்­ளி­களில் நிலை பெற்­றது.

ரூ.5.66 லட்­சம் கோடி மாயம் :
கடந்த, நான்கு வர்த்­தக தினங்­களில், பங்கு விலை சரி­வால், முத­லீட்­டா­ளர்­கள், 5.66 லட்­சம் கோடி ரூபாய் இழந்­துள்­ள­னர். நேற்று மட்­டும், மும்பை பங்­குச் சந்­தை­யில் பட்­டி­ய­லிட்ட நிறு­வ­னங்­களின் சந்தை மூல­த­னம், 2.02 லட்­சம் கோடி ரூபாய் குறைந்­துள்­ளது.

மூலக்கதை