மீண்டும் இயக்குநர் கிருஷ்ணா

தினமலர்  தினமலர்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் முதல்படம் - சில்லுன்னு ஒரு காதல். சூர்யா, ஜோதிகா நடித்த இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருஷ்ணா. சில்லுன்னு ஒரு காதல் படம் தோல்வியடைந்ததினால் அடுத்தப்பட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டார்.

அதன் பிறகு சில வருடங்களுக்குப் பிறகு நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்கினார் கிருஷ்ணா. அந்தப்படமும் சரியாகப் போகவில்லை.

இந்நிலையில், தெலுங்கில் RX100 என்ற ஹிட் படத்தில் ஹீரோவாக நடித்த கார்த்திகேயாவை வைத்து தமிழ, தெலுக்கு என இரண்டு மொழிகளில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். RX100 கார்த்திகேயா தமிழில் அறிமுகமாகும் இந்த படத்திற்கு ஹிப்பி என்று பெயரிடப்பட்டுள்ளது.

மூலக்கதை