இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
இந்தியா  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் ஐ.நா. கூட்டம் நடைபெறும் நாளில் அமைச்சர்கள் சந்திப்பதாக இருந்தது. முன்னதாக தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முயற்சிக்காததால் சந்திப்பை ரத்து செய்வது பற்றி மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுருந்தது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதில் இந்தியா அதிருப்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்த பயனும் இருக்காது என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தீவிரவாதி புர்ஹான் வானியின் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது. புர்ஹான் வானியை சுதந்திர போராட்ட தியாகி என வருணித்து பாகிஸ்தான் அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பான இம்ரான்கான் அரசின் போக்கிலும் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளது. பிரதமர் இம்ரான்கானின் உண்மையான முகம் அம்பலமாகிவிட்டதாக மத்திய அரசு புகார் தெரிவித்துள்ளது.

மூலக்கதை