Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்! - ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Les Républicains கட்சியை விட்டு விலகும் அங்கத்தவர்கள்!  ஒரு இலட்சத்துக்கும் மேல் வெளியேற்றம்!!

பிரான்சின் மிக முக்கிய பாரம்பரியம் கொண்ட ரீபபுளிகன் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அங்கற்றவர்கள் வெளியேறிக்கொண்டு உள்ளனர். 
 
டிசம்பர் 2017 ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலின் முதல்கட்டத்தில் ரீபபுளிகன் கட்சியில் 2,34,556 அங்கத்தவர்கள் இருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பெரிதளவில் செயற்படாத ரீபபுளிகன் கட்சியில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளனர். தற்போது கட்சியில் 120,000 இல் இருந்து 130,000 வரையானவர்கள் மாத்திரமே அங்கத்தவர்களாக உள்ளதாக நேற்று வியாழக்கிழமை வெளியான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. 
 
ஆனால் இந்த தகவலை கட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் உறுதிசெய்யவில்லை. இவ்வருடம் டிசம்பரில் மீண்டும் கட்சி வேகமாக செயற்படத்தொடங்கும். மாபெரும் கட்சி பேரணி ஒன்று நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதன்போது கட்சியின் பலம் குறித்து தெரிந்துகொள்வீர்கள் என்பது போன்ற பதில் கட்சி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை