சாமி 2-வை சொந்தமாக வெளியிட்ட தயாரிப்பாளர்

தினமலர்  தினமலர்
சாமி 2வை சொந்தமாக வெளியிட்ட தயாரிப்பாளர்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2003-ல் வெளியான படம் 'சாமி'. சூப்பர் ஹிட்டான இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது 'சாமி-2' படம். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

இன்னொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் பாபி சிம்ஹா, ஜான் விஜய், சூரி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

விஜய் நடித்த 'புலி', விக்ரம் நடித்த 'இருமுகன்' படங்களை தொடர்ந்து ஷிபு தமீன் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. சுமார் 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு விலை போகவில்லை. எனவே தயாரிப்பாளரே தமிழ்நாட்டில் சொந்தமாக ரிலீஸ் செய்தள்ளார்.

மூலக்கதை