மீண்டும் இணைந்த இமான் - விஜய் சேதுபதி

தினமலர்  தினமலர்
மீண்டும் இணைந்த இமான்  விஜய் சேதுபதி

'விஜயா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்க, 'ஸ்கெட்ச்' படத்தை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி. 2019 ஜனவரியில் இந்த படத்துக்குக் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். விஜய்சேதுபதி நடித்த 'கருப்பன்', 'றெக்க' முதலான படங்களுக்கு ஏற்கெனவே இசை அமைத்துள்ள டி.இமான், இப்போது மீண்டும் விஜய்சேதுபதியுடன் இந்தப்படத்தில் இணைந்துள்ளார்.

மூலக்கதை