ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால்

தினமலர்  தினமலர்
ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால்

'அடங்க மறு' படத்தில் நடித்து முடித்துவிட்ட ஜெயம்ரவி, அடுத்து அவருடைய அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் 'தனி ஒருவன்-2' படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன.

இதற்கிடையில் மற்றுமொரு படத்தில்... அதாவது, 'வேல்ஸ் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்கிறார் 'ஜெயம்' ரவி. இந்த படத்தில் 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

அவருக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படம் 'ஜெயம்' ரவியின் 24-வது படமாம். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

இந்த படத்தில் 'ஜெயம்' ரவி, காஜல் அகர்வாலுடன் கே.எஸ்.ரவிகுமார், சம்யுக்தா ஹெக்டே, 'யோகி' பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யார் இசை அமைக்கிறார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

மூலக்கதை