சர்வதேச விண்வெளி வீரர்களுடன் இவாங்கா டிரம்ப் காணொலியில் உரையாடல்

தினகரன்  தினகரன்
சர்வதேச விண்வெளி வீரர்களுடன் இவாங்கா டிரம்ப் காணொலியில் உரையாடல்

பல ஆயிரம் கி.மீ. உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மைய வீரர்களுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் காணொலியில் உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்திற்கு டிரம்பின் மகள் இவாங்கா சென்றார். அப்போது சர்வதேச விண்வெளி மையத்தில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க, ரஷ்ய வீரர்களை பிரத்யேக காணொலியில் பார்த்த போது உற்சாகத்தில் திழைத்தார். இவர்களுடன் இவாங்கா சிறிது நேரம் உரையாடினார். அவருடன் பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் ஒருவர், தாம் இவாங்காவை பார்த்த போது தனக்கு குதுகலம் ஏற்பட்டதாக தெரிவித்தார். விண்வெளி வீரர்களுடன் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்துடன் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா தாமும் விண்வெளி வீரராக வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்தார். தற்போது விண்வெளியில் இருந்த படி தம்முடைய கனவை அனைவரும் நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். சர்வதேச விண்வெளி மையத்தின் விண்கலத்தில் உள்ள வீரர்கள் நாற்காலிகள் இல்லாமல் காற்றிலேயே அமர்ந்த படியும் மிதந்த படியும் உரையாடியது இவாங்காவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மூலக்கதை