திருப்பதி கோவில் பிரம்மோற்வத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் - பாதாம், முந்திரியால் தயாரிக்கப்பட்ட கிரீடம், மாலை

தினகரன்  தினகரன்
திருப்பதி கோவில் பிரம்மோற்வத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில்  பாதாம், முந்திரியால் தயாரிக்கப்பட்ட கிரீடம், மாலை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருமஞ்சனத்திற்காக 5 லட்சம் ரூபாய் செலவில் பாதாம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட உலர் பழங்களை கொண்டு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட மாலை மற்றும் கிரீடத்தை திருப்பூரை சேர்ந்த பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி தினமும் பிற்பகலில் ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது. இந்த திருமஞ்சனத்தில் மலையப்பசுவாமியை அலங்காரிப்பதற்காக பாதாம், முந்திரி, ஏலக்காய், கிராம்பு மற்றும் உலர்ந்த பழங்கள் கொண்டு திருப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் கிரீடம் மற்றும் மாலையை 5 லட்சம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக தயார் செய்து தேவஸ்தான அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினார்

மூலக்கதை