திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8ம் நாள் பிரம்மோற்சவம்: கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8ம் நாள் பிரம்மோற்சவம்: கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி பாயும் தங்க குதிரையில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் 8வது நாளான நேற்றிரவு மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பெருக்குடன் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர். இந்த வீதியுலாவின் போது பக்தர்கள் பல கலை நடனங்களை நிகழ்த்தினர். அதில் மயில் போன்று வேடமிட்டு ஆடியது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. கல்கி அவதாரம் என்று கருதப்படும் குதிரை அவதாரத்தில் மலையப்ப சுவாமிகள் மன்னர் அலங்காரத்தில் வலம் வந்தார். இந்த உலாவின் போது அவருக்கு திக்விஜயம் செய்து கற்பூர ஆரத்தி எடுக்கப்பட்டது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. திருமலையில் உள்ள வராக சுவாமி கோவில் எதிரே ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் சக்கரத்தாழ்வார் தீரித்தவாரி கோவிலில் நடைபெறவுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான பகதர்கள் கலந்து கொண்டு புனித நீராட உள்ளதால், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை