கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார விவகாரம் ஜலந்தர் பிஷப் இன்று கைது?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார விவகாரம் ஜலந்தர் பிஷப் இன்று கைது?

கொச்சின்: ேகரள மாநில கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜரான ஜலந்தர் பிஷப்பிடம், 150க்கும் ேமற்பட்ட கேள்விகளை கேட்டு, எஸ்ஐடி போலீசார் குடைந்து எடுத்தனர். அவர், இன்று அல்லது நாளை கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக, மாநில டிஜிபி லோக்நாத் பஹ்ரா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் பிராங்கோ முலக்கல் என்பவர் மீது, கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த  44 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.   கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக தனது புகாரில் கூறினார். இதுதொடர்பாக, கோட்டயம் டிஎஸ்பி  ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே. சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு  விசாரணை மேற்கொண்டுள்ளது.

எனினும் பிஷப்புக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுப்பதில்  தாமதம் செய்வதாக கேரளாவில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், பலாத்கார விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் (எஸ்ஐடி), புகார் குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிஷப்புக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் கொச்சியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வைக்கம் டிஎஸ்பி கே. சுபாஷ் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு முன் பிராங்கோ ஆஜரானார். அவரிடம் முதற்கட்டமாக 7 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அடுத்தகட்ட விசாரணைக்காக நேற்றும் ஆஜரானார். அவரிடம் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு, 150க்கும் மேற்பட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு, அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பிஷப் பிராங்கோ கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 25ம் தேதி நடக்கிறது.

அவரை கைது செய்வதற்கு எந்த தடையும் தற்போது இல்லை என்றாலும், 25ம் தேதி வரை போலீசார் கைது நடவடிக்கையை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதுகுறித்து, கேரள டிஜிபி லோக்நாத் பஹ்ரா கூறுகையில், ‘‘கேரள போலீசின் சிறப்பு புலனாய்வு விசாரணை குழு, பிஷப்பிடம் தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகிறது.



விசாரணை இன்று முடிவுறும் நிலையில், அவரை கைது செய்வது தொடர்பாக, விசாரணை அதிகாரி முடிவு செய்வார். இன்று அல்லது நாளை ஒரு முடிவு எடுக்கப்படும்.

வருகிற 25ம் தேதி பிஷப்பின் முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக, சட்டப்படி அவரை கைது செய்ய எந்த பிரச்னையும் இல்லை.

தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றார். இந்நிலையில், பிஷப் பிராங்கோ மீது கன்னியாஸ்திரிகள் மட்டுமின்றி பல்வேறு  தரப்பினரும் கத்தோலிக்க தலைமையகமான வாடிகனுக்கு புகார் அனுப்பினர்.   இதையடுத்து வாடிகன் விசாரணை தொடங்கி நடத்தி வருகிறது.

இதனிடையே பாலியல்  புகாருக்கு ஆளான பிராங்கோ தற்காலிகமாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும்  விலக்கி வைக்கப்படுவதாக வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனை, ெடல்லியில் உள்ள கத்தோலிக்க பிஷப்  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


.

மூலக்கதை