முதலை, பாம்பு, ராட்சத ஆமை உள்ளிட்ட 400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர்

தினகரன்  தினகரன்
முதலை, பாம்பு, ராட்சத ஆமை உள்ளிட்ட 400 விலங்குகளுடன் வாழும் விசித்திர மனிதர்

உலகிலேயே விசித்திரமான விலங்குகளுடன் வாழ்கிறார் ஒரு பிரெஞ்சுக்காரர். பிரான்சின் லூரி நதிக்கரையில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 67 வயதான பிலிஃப் விலங்குகளின் காதலர். அவரது வீட்டில் அலி, கேட்டர் என இரு முதலைகள், ராட்சத ஆமை, நல்ல பாம்பு, கொடிய விசம் கொண்ட காட்டு வீரியன் என வித்தியாசமான 40 வகை விலங்குகள் உள்ளன. அவற்றுக்கு தேவையான உணவு, அவற்றை பராமரிப்பது என இதையே தன் வாழ்வாக்கி கொண்டுள்ளார் பிலிஃப். சிறுவயது முதலே ஊர்வன இன பிராணிகளோடு பிரியம் கொண்டவர். அதனால் தனது வீட்டையே பிராணிகளின் புகலிடமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

மூலக்கதை