பாக். எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் : செப். 29-ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு

தினகரன்  தினகரன்
பாக். எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் : செப். 29ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட முடிவு

புதுடெல்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தியதை நினைவுகூர செப்.29ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் எல்லையில் இருந்து பாகிஸ்தான் பகுதிக்கு சுமார் 3 கி.மீ. வரை உள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களின் மீது இந்திய ராணுவம் \'சர்ஜிக்கல் ஸ்டிரைக்\' எனப்படும் துள்ளிய தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. 7 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவத்தினர் அழித்தனர். அதிரடி தாக்குதல் குறித்த ஆதாரங்களை  வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வலியுறுத்தினார்கள். இதுபற்றிய வீடியோ விவரங்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் செப்.29ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தியதை நினைவுகூர இந்த தினம் கொண்டாட முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை