எதிர்ப்பு எதிரொலி : பட பெயரை மாற்றிய சல்மான்

தினமலர்  தினமலர்
எதிர்ப்பு எதிரொலி : பட பெயரை மாற்றிய சல்மான்

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் தயாரித்துள்ள படம் லவ் ராத்திரி. ஆயுஷ் சர்மா, வரீனா ஹூசைன், அனுஷ்மன் ஜா, ரோனித் ராய், ராம் கபூர் உள்பட பலர் நடித்துள்ளனர். அபிராஜ் மினவாலா இயக்கி உள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகிறது.

நவராத்திரியின் முதல் நாள் அன்று ஹீரோவும், ஹீரோயினும் சந்தித்துக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து நவராத்திரிக்குள் அவர்களுக்குள் காதல் வருவதும், அதை தொடர்ந்து பிரச்னைகள் வருவதும், 9 நாட்களுக்குள் அது முடிவுக்கு வருவதும் தான் கதை. படம் முழுக்க நவராத்திரி பின்னணியில் நடக்கிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பபட்டது. இதில் நவராத்திரி தவறாக சித்தரிக்கப்படுவதாகவும், அதனாலேயே படத்திற்கு லவ்ராத்திரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து மும்பையை சேர்ந்த அஜய்குமார் வக்மாரே என்ற வக்கில், படத்திற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சல்மான்கான் சார்பில் ஆஜரான வக்கில், படத்தில் இந்துக்களையோ, நவராத்திரியையோ கிண்டல் செய்து காட்சிகள் எதுவும் இல்லை என்றும், படத்தின் தலைப்பை லவ் யாத்திரி என்று மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மூலக்கதை