ஒடிசாவின் சண்டிபூரில் இருந்து குறைந்த தொலைவு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

தினகரன்  தினகரன்
ஒடிசாவின் சண்டிபூரில் இருந்து குறைந்த தொலைவு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

பாலாசோர்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), தரையில் இருந்து குறைந்தளவு தூரம் சென்று தரை இலக்கை தாக்கும் பிரகார் ஏவுகணையை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது. இது  ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த ஆய்வு தளம் 3ல் இருந்து நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் ஏவி சோதிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியதாவது: திட எரிபொருள் நிரப்பட்ட குறைந்த அளவு தூரம் பாயும் ஏவுகணையுடன், அதன் இலக்கை ஆராயும் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு எந்த தட்பவெப்பநிலை, நிலப்பரப்பையும் ஆராயந்து துல்லியமாக இலக்கை தாக்கும். இன்றைய சோதனையில் ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது என்றார்.

மூலக்கதை