பரிஸ் - தோல்வியில் முடிந்த நகை விற்பனை! - காவல்துறையினர் தலையீடு!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  தோல்வியில் முடிந்த நகை விற்பனை!  காவல்துறையினர் தலையீடு!!

பரிஸ் நகை விற்பனையாளர் ஒருவருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையே இடம்பெற்ற வியாபாரம் ஒன்று சிக்கலுக்குள்ளானது. 
 
நேற்று முன்தினம் புதன்கிழமை பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள நபர் ஒருவர், வாடிக்கையாளரை சந்திப்பதற்குரிய ஏற்பாட்டினை செய்திருந்தார். அவரிடம் இருந்த €115,000 க்கள் பெறுமதியுள்ள நகையினை கொடுத்து பணத்தினை பெற்றுக்கொள்ளும் வியாபாரம் ஒன்று முன்னதகவே முடிவெடுக்கப்பட்டு, இருவரும் சந்தித்திருந்தனர். €33,000 பெறுமதியுள்ள மூன்று தங்கக்கட்டிகள், €200 பெறுமதியுள்ள 20 தங்கக்காசுகள் உட்பட மேலும் சில நகைகள் விற்பனைக்கு எடுத்து வந்திருந்தார். அனைத்தும் பேசிமுடிக்கப்பட்டு, வாடிக்கையாளர் €115,000 க்களை அவரிடம் கொடுத்து விட்டு, புறப்படும் போது நகை விறனையாளர் கொடுத்த நகையினை மீண்டும் பறித்துள்ளார். 
 
பின்னர் இந்த சம்பவம் மேலும் பரபரப்பானது. நகையினை எடுத்துக்கொண்டு மகிழுந்தில் வேகமாக தப்பிச் சென்றுள்ளார். அவரை வாடிக்கையாளர் பின்னால் துரத்திக்கொண்டு சென்றுள்ளார்.  வீதியில் நின்றிருந்த காவல்துறையினர் இச்சம்பவத்தை பார்த்து, தப்பியோடிய மகிழுந்தை நிறுத்தியுள்ளார். விஷயம் மோசமானதாக மாறிவிட்டதை உணர்ந்த விற்பனையாளர் நகை பையினை  தூக்கி வாடிக்கையாளரிடம் எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். வாடிக்கையாளர் வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார்.

மூலக்கதை