37 மொழிகளில் கர்ணன் : விக்ரம்

தினமலர்  தினமலர்
37 மொழிகளில் கர்ணன் : விக்ரம்

விக்ரம் - ஹரி கூட்டணியில் சாமி படத்தின் இரண்டாம் பாகம், சாமி ஸ்கொயர் என்ற பெயரில் இன்று வெளியாகிறது. இதன் அனுபவம் குறித்து விக்ரம் அளித்த பேட்டி :

சாமி 2 பக்கா கமர்ஷியல் படம். 15 ஆண்டுகளுக்கு பிறகு அதே கேரக்டரில் நடித்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் இது 15 வருட கதை அல்ல. இரண்டு விதமான ரோலில், உடல் எடையை அதிகப்படுத்தி நடித்திருக்கிறேன்.

இது முழுக்க முழுக்க கமர்ஷியல் படம். சாமியில் நிதானம் இருக்கும். சாமி 2-வில் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம். இது சாமியும் இல்ல, சிங்கமும் இல்ல, வேற மாதிரி இருக்கும். சாமி 2-வில் த்ரிஷா இல்லாதது வருத்தம். இருப்பினும் கீர்த்தி, ஐஸ்வர்யா சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கமல் தயாரிப்பில் அடுத்து நடிக்கிறேன். படப்பிடிப்பு துவங்கிவிட்டது. குருதிப்புனலில் டப்பிங் பேசினேன். முதன்முறையாக அவர் தயாரிப்பில் நடிக்கிறேன். இதுதவிர 37 மொழிகளில் கர்ணன் படம் தயாராகிறது. பெரிய பட்ஜெட், வித்தியாசமான கதைக்களம்.

மகன் துருவ், குட்டி விக்ரமாக வர வேண்டாம். அவனுக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும். மகனுடன் போட்டி இருக்காது. அவருக்கு என்று ஒரு மார்க்கெட் இருக்கும். வர்மா படம் வெளிவந்த பின்னர் அடுத்தப்படம் முடிவு செய்யப்படும். தற்போது படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். மகள் நன்றாக உள்ளார். எனக்கு தாத்தா ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இருப்பினும் இன்னும் கொஞ்சகாலம் ஆகும்.

அந்நியன், ஐ போன்ற படங்கள் பர்பாமன்ஸ் ஒட்டிய படம். ஷங்கர், மணிரத்னம் படங்களில் ரிஸ்க் அதிகம். ஹரியை பொருத்தமட்டில் செட்டில் உட்கார கூட நேரமிருக்காது. ஒரு ஷாட் முடிந்ததும், அடுத்த ஷாட் ரெடியாக இருக்கும்.

நான் நடித்த படங்களிலேயே பிதாமகன் தான் கிரியேட்டர் படம். செருப்பு இல்லாமல் காட்டுக்குள்ள ஓட விட்ட படம். அடுத்தப்படியாக ஐ உடல் ரீதியாக ரிஸ்க் அதிகம். ராவணன், சாமுராய் படங்களில் உண்மையாகவே அடி வாங்கினேன். இந்த படங்களை விடவும் ரிலாக்ஸ் இல்லாமல் வேலை பார்த்த படம் சாமி 2. படம் பார்த்தேன், ஹரி அவ்வளவு வேகமாக படமாக்கி இருக்கிறார். இவ்வாறு விக்ரம் கூறினார்.

மூலக்கதை