சிறிய உருவ ஈஃபிள் கோபுரம் விற்பனையாளர்கள் ஒன்பது பேர் கைது! - இருபது தொன் பொருட்கள் மீட்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிய உருவ ஈஃபிள் கோபுரம் விற்பனையாளர்கள் ஒன்பது பேர் கைது!  இருபது தொன் பொருட்கள் மீட்பு!!

சட்டவிரோதமாக ஈஃபிள் கோபுரத்தின் சிறியவகை சிலைகள் (Miniature) விற்பனை செய்யும் ஒரு குழு மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
உத்தியோகபூர்வ நிறுவனங்கள் தவிர்த்து ஏனையவர்கள் ஈஃபிள் கோபுரத்தின் மினியேச்சர்கள் விற்பனை செய்வதற்கு பிரான்சில் அனுமதி இல்லை. இருப்பினும் வீதிகளில் இந்த சிறியவகை உருவங்கள் விற்பனையாகிக்கொண்டு தான் உள்ளன. இதுவரை பலர் கைதும் செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில் Charenton-le-Pont (Val de Marne), Clichy (Hauts-de-Seine) ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் மிகப்பெரும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் 20 ஆயிரம் தொன்கள் எடைகொண்ட சிலைகள் மீட்கபட்டுள்ளன. 1,000 பெட்டிகளில் இவை அடைக்கப்பட்டிருந்தன. இப்பகுதிகளில் உள்ள சில கடைகளிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளன. 
 
இதன்போது, மூன்று சீன நாட்டினைச் சேர்ந்த மொத்த விற்பனை வணிகர்கள் தப்பியோடியுள்ளனர். பரிஸ் மற்றும் Aubervilliers பகுதிகளைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்கள் உட்பட மொத்தமாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை