ஐ.நா கட்டடத்தில் சோலார் பேனல்: இந்தியா உதவி

தினமலர்  தினமலர்
ஐ.நா கட்டடத்தில் சோலார் பேனல்: இந்தியா உதவி

வாஷிங்டன்: ஐக்கிய நாடுகளின் கட்டடத்தில் சூரிய ஒளி தகடுகளை பதிக்க இந்தியா தனது பங்களிப்பாக ஒருமில்லியன் அமெரிக்க டாலரை வழங்கி உள்ளது.
இது குறித்து இந்தியாவுக்கான ஐ.நா.தூதர் சையத் அக்பருதீன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது: கார்பன் அளவை குறைப்பதற்காகவும், நிலையான ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஐ.நா.,கட்டடத்தின் மேற்பரப்பில் சூரிய ஒளி தகடுகள் பதிக்கப்பட உள்ளது. இதற்காகக இந்தியா தனது பங்களிப்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கி உள்ளது.
அடுத்த சுற்றுச்சூழல் தினத்திற்குள்ளாக ஐ.நா.,கட்டடத்தில் சூரிய ஆற்றல் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சையத்அக்பருதீன் ஐ.நா.,வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க சூரிய ஆற்றலை பயன்படுத்த ஐ.நா.,செயலகத்துடன் இந்தியாபங்கெடுக்கும் என கூறி இருந்தது. குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், செயல் திறனை ஊக்குவிக்கும் ஒரு வலுவான செய்தி என ஐநாவின் நிர்வாக அதிகாரி ஜான் பீகிள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை