பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளில் மோடி, சிவராஜ் சிங் படத்துடன் கூடிய டைல்ஸ்களை அகற்ற உத்தரவு

தினகரன்  தினகரன்
பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளில் மோடி, சிவராஜ் சிங் படத்துடன் கூடிய டைல்ஸ்களை அகற்ற உத்தரவு

மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசம் மாநிலத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதலமைச்சரின் படங்களுடன் கூடிய டைல்ஸ்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் நுழைவு வாயில் மற்றும் சமையல் அறையிலில் பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சகர் சிவராஜ் சிங்கின் படங்கள் மற்றும் அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் முழக்கங்கள் பறிக்கப்பட்ட டைல்ஸ்கள் வழக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதன் மூலம் தேர்தலில் ஆதாயம் பெற பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிராக பத்திரிக்கையாளர் தொடர்ந்த வழக்கில் திட்டத்தின் சின்னம் என்ற வகையில் இந்த டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் டைல்ஸ்களை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மூலக்கதை