விஜய் ஹசாரே டிராபியில் 10 ஓவர், 10 ரன், 8 விக். நதீம் உலக சாதனை

தினகரன்  தினகரன்
விஜய் ஹசாரே டிராபியில் 10 ஓவர், 10 ரன், 8 விக். நதீம் உலக சாதனை

சென்னை: ஜார்க்கண்ட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் 10 ஓவரில் 10 ரன் மட்டுமே கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி முதல் தர கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ளார்.விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சென்னையில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 28.3 ஓவரில் 73 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்து வீசிய ஜார்க்கண்ட் அணியின் ஷபாஸ் நதீம் 10 ஓவரில் 10 ரன் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.இதன் மூலம், முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான ரன் கொடுத்து அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன், 1997-98ல் இமாச்சல பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் ராகுல் சங்வி 15 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. மேலும், ஒட்டுமொத்தமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கூட இலங்கையின் சமிந்தா வாஸ் 2001-02ல் ஜிம்பாப்வேக்கு எதிராக 19 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருக்கிறது. இந்த சாதனையையும் நதீம் மிஞ்சி அசத்தி உள்ளார். இப்போட்டியில் ஜார்க்கண்ட் அணி 14.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்து வென்றது.

மூலக்கதை