சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் சிந்து

தினகரன்  தினகரன்
சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் சிந்து

பீஜிங்: சீன ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் கால் இறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் சிந்து, தாய்லாந்தின் புஷானனை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை இழந்த சிந்து பின்னர் போராடி 21-23, 21-13, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-12, 15-21, 24-22 என்ற செட்களில் தாய்லாந்தின் சப்பன்யு அவிங்சனோனை வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார்.

மூலக்கதை