தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு : கோஹ்லி, மீராபாய்க்கு கேல் ரத்னா

தினகரன்  தினகரன்
தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு : கோஹ்லி, மீராபாய்க்கு கேல் ரத்னா

புதுடெல்லி: இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், விராட் கோஹ்லி, மீராபாய் சானு ஆகியோர் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கும், தமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்யன் உட்பட 20 பேர் அர்ஜூனா விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்விருதுகளை வரும் 25ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்கிறார். விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருதுவழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான (2018) விருது பெறும் வீரர்கள் பட்டியலை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியும், பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை நம்பர்-1 இடத்திற்கு உயர்த்திய கோஹ்லி கேப்டனாக பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். கடந்த ஆண்டு பத்ம விருது பெற்ற இவர், சச்சின் டெண்டுல்கர் (1997), மகேந்திர சிங் டோனி (2007) ஆகியோருக்குப் பிறகு கேல் ரத்னா விருது பெறும் 3வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.கடந்த ஆண்டு உலக பளுதூக்கும் போட்டியிலும், சமீபத்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டிலும் மீராபாய் சானு தங்கம் வென்று சாதித்தவர் ஆவார். மேலும், அர்ஜூனா விருதுக்கு 20 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழக டேபிள்டென்னிஸ் வீரர் சத்யன் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டில் சத்யன் அடங்கிய இந்திய அணி குழு போட்டியில் வெண்கலம் வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டில் டேபிள்டென்னிசில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தந்து வரலாற்று சாதனை படைத்தவராவார்.இவரைத் தவிர, ஈட்டி எறிதலில் சாதித்த நீரஜ் சோப்ரா, மகளிர் தடகளத்தில் பதக்கம் குவித்து வரும் ஹிமா தாஸ், மகளிர் கிரிக்கெட்டில் அதிரடி வீராங்கனை மந்தனா, ஹாக்கியில் அசத்தும் சவிதா, டேபிள் டென்னிசில் ஜொலிக்கும் மனிகா பத்ரா, ஜின்சன் ஜான்சன் (தடகளம்), சிக்கி ரெட்டி (பேட்மின்டன்), சதிஷ் குமார் (குத்துச்சண்டை), சுபன்கர் ஷர்மா (கோல்ப்), மன்பிரீத் சிங் (ஹாக்கி), ரவி ரத்தோர் (போலோ), ரஹி சர்னோபட் (துப்பாக்கி சுடுதல்), அங்குர் மிட்டல் (துப்பாக்கி சுடுதல்), ஷிரேயாசி சிங் (துப்பாக்கி சுடுதல்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்), பூஜா காடியன் (வுஷூ), சுமித் (மல்யுத்தம்), அங்குர் தாமா (பாரா தடகளம்), மனோஜ் சர்கார் (பாரா பேட்மின்டன்) ஆகிய 20 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுகளை வரும் 25ம் தேதி டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவிக்க உள்ளார்.சிறந்த பயிற்சியாளர் னிவாச ராவுக்கு விருதுசிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருதுக்கு 8 பேர் தேர்வாகி உள்ளனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் னிவாச ராவ் இடம் பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் முன்னணி டேபிள்டென்னிஸ் வீரர் சரத்கமலின் தந்தையும் ஆவார். இவரைத் தவிர, குட்டப்பா (குத்துச்சண்டை), விஜய் ஷர்மா (பளுதூக்குதல்), சுக்தேவ் சிங் பன்னு (தடகளம்), கிளாரன்ஸ் லோபோ (ஹாக்கி), தரக் சின்கா (கிரிக்கெட்), ஜிவன் குமார் ஷர்மா (ஜூடோ), பீடு (தடகளம்) ஆகியோர் துரோணாச்சாரியா விருதுக்கு தேர்வாகி உள்ளனர். வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதுக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை