'பச்சிலை' சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் : வாழை ஊடுபயிராக பயிரிடல்

தினமலர்  தினமலர்

மதுரை;மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விவசாயிகள் பூ மாலை தயாரிக்க பயன்படும் 'பச்சிலை' சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாழை, தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதால் இரடிப்பு லாபமும் கிடைக்கிறது.
பூ மாலை தயாரிக்கும் போது அழகிற்காக இடையிடையே பச்சிலையை கோர்ப்பர். இதில் மென்மையான நறுமணம் நாள் முழுவதும் வீசும்.
பச்சிலை இல்லாமல் மாலை, மணமாலைகள் மணக்காது. சோழவந்தான், மன்னாடிமங்கலம், விக்கிரமங்கலத்தில் பச்சிலை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வாழை, தென்னையில் ஊடுபயிராக பயிரிடுவதால் இரடிப்பு லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.
விவசாயி ராஜாங்கம் கூறியதாவது: ஒரு ஏக்கரில் பச்சிலை பயிரிட்டுள்ளேன். விதைப்புக்கு பின் 60வது நாளில் இருந்து பலன் கொடுக்கும். 300 கிராம் எடை கொண்ட ஒரு முடிச்சின் விலை 6 ரூபாய். முகூர்த்த நாட்களில் விலை அதிகரிக்கும். நாள் ஒன்றுக்கு 200 முடிச்சு வீதம் மூன்று ஆண்டுகளுக்கு பலன் தரும். அன்றாட செலவுக்கு உதவிடும் என்பதால் பச்சிலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

மூலக்கதை