ஆசிய கோப்பை கிரிக்கெட் - பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட்  பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

அபுதாபி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 6-வது போட்டியில் பங்களாதேஷ் அணியை 136 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முன்னதாக முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்தது. பின்னா் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் அசத்தினா். இறுதியில் வங்கதேச அணி 42.1ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 136  ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

மூலக்கதை