மஞ்­சள் வரத்து சரிவு; விலை­யும் குறைந்­தது

தினமலர்  தினமலர்
மஞ்­சள் வரத்து சரிவு; விலை­யும் குறைந்­தது

ஈரோடு : மஞ்­சள் வரத்து சரிந்­த­து­டன், தரம் குறை­வா­க­வும் வரு­வ­தால், விலை சரிந்து வரு­கிறது.

ஈரோடு மாவட்­டத்­தில், உற்­பத்தி குறை­வால் விலை உய­ரும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், ஆந்­திரா, கர்­நா­டகா உட்­பட வட மாநி­லங்­களில், மஞ்­சள் உற்­பத்தி அதி­க­ரித்­த­தால், விலை உய­ர­வில்லை.இருப்­பி­னும், தமி­ழக மஞ்­ச­ளின் தரம் கூடு­த­லாக இருக்­கும் என்­ப­தால், இவற்­றின் விலை எப்­போ­தும் உயர்ந்து காணப்­படும். ஆனால், கடந்த, 20 நாட்­க­ளாக விரலி, குவிண்­டால், 5,500 ரூபாய் முதல், 7,500 ரூபாய்க்­குள்­ளும்; கிழங்கு, குவிண்­டால், 4,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை­யில் மட்­டுமே விலை போகிறது.

இது குறித்து, ஈரோடு மஞ்­சள் வணி­கர்­கள் மற்­றும் கிடங்கு உரி­மை­யா­ளர்­கள் சங்க செய­லர் சத்­தி­ய­மூர்த்தி கூறி­ய­தா­வது: தர­மற்ற மஞ்­சள் வரத்­தா­லும், தேவை குறை­வா­லும் விலை குறைந்­துள்­ளது. தமி­ழ­கத்­தி­லும் உற்­பத்தி குறை­வால், தர­மான மஞ்­சளை இருப்பு வைத்­துள்­ள­னர். தரம் குறை­வாக உள்ள மஞ்­சளை மட்­டுமே விற்­கின்­ற­னர்.

பண்­டிகை காலம் துவங்க இருப்­ப­தால் தேவை அதி­க­ரிக்­கும்; அப்­போது விற்­க­லாம் என, பலர் இருப்பு வைத்­துள்­ள­னர். எனவே, தற்­போது மஞ்­சள் விலை கடு­மை­யாக சரிந்து வரு­கிறது. அடுத்த மாதம் முதல், விலை உயர வாய்ப்­புள்­ளது. இவ்­வாறு, அவர் கூறி­னார்.

மூலக்கதை