பழைய பைக்குகள் சந்தையில் ‘ஹார்லி டேவிட்சன்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
பழைய பைக்குகள் சந்தையில் ‘ஹார்லி டேவிட்சன்’ நிறுவனம்

புது­டில்லி : அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘ஹார்லி டேவிட்­சன்’ பைக் தயா­ரிப்பு நிறு­வ­னம், இந்­தி­யா­வில் பழைய பைக்­கு­க­ளுக்­கான சந்­தை­யில் இறங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னம் அறி­வித்­து உள்­ள­தா­வது: உப­யோ­கப்­ப­டுத்­திய ஹார்லி டேவிட்­சன் பைக்­கு­களை தீர பரி­சோ­தித்து, அதன் அடிப்­ப­டை­யில் அவற்­றுக்கு சான்­றி­தழ் வழங்­கப்­பட்டு, அதன் பின்­னரே விற்­பனை செய்­யப்­படும். இந்த பைக்­கு­க­ளுக்கு, ஒரு ஆண்டு காலத்­துக்­கான வாரண்­டி­யும் வழங்­கப்­படும். வாடிக்­கை­யா­ளர்­கள் விருப்­பப்­பட்­டால், இந்த வாரண்­டியை மேலும் இரண்டு அல்­லது மூன்று ஆண்­டு­க­ளுக்கு நீட்­டித்­துக் கொள்­ள­லாம். இவ்­வாறு அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே, ஹார்லி டேவிட்­ச­னின் போட்டி நிறு­வ­னங்­களில் ஒன்­றான, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, ‘டிரை­யம்ப்’ பழைய பைக்­கு­களை விற்­பனை செய்­வது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தாக தெரி­வித்­து உள்­ளது. உள்­நாட்டு நிறு­வ­ன­மான, ‘ராயல் என்­பீல்டு’ நிறு­வ­னம், ஏற்­க­னவே இந்த பழைய பைக்­கு­க­ளுக்­கான சந்­தை­யில் நுழைந்­து­விட்­டது.

மூலக்கதை