சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி அதிகரிப்பு; அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது

தினமலர்  தினமலர்
சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி அதிகரிப்பு; அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது

புதுடில்லி : மத்­திய அரசு, சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்­டியை, 0.40 சத­வீ­தம் வரை உயர்த்­தி­யுள்­ளது. புதிய வரி விகி­தம், அக்., 1 – டிச., 31 வரை அம­லில் இருக்­கும் என, தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

ரிசர்வ் வங்கி முன்­னாள் துணை கவர்­னர், சியா­மளா கோபி­நாத் தலை­மை­யி­லான குழு, சிறு­சே­மிப்பு திட்­டங்­கள் தொடர்­பான சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை வலி­யு­றுத்தி, மத்­திய அர­சுக்கு அறிக்கை அளித்­துள்­ளது.

நிதி சந்தை :
அதில், நிதிச் சந்தை நில­வ­ரத்­திற்கு ஏற்ப, சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை, காலாண்­டுக்கு ஒரு முறை நிர்­ண­யிக்க வேண்­டும் என, வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, அரசு கடன் பத்­திர வட்டி வரு­வாய் அடிப்­ப­டை­யில், அவற்­றின் முதிர்ச்சி காலத்­திற்கு நிக­ரான சேமிப்பு திட்­டங்­க­ளுக்கு, காலாண்­டுக்கு ஒரு முறை வட்டி விகி­தம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.

தற்­போது, 10 ஆண்டு முதிர்வு கால கடன் பத்­தி­ரங்­களின், வட்டி வரு­வாய் அதி­க­ரித்­துள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில், மத்­திய அரசு, சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்கு, 0.30 – 0.40 சத­வீ­தம் வரை வட்­டியை உயர்த்­தி­யுள்­ளது. புதிய வட்டி விகி­தம், அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை, அம­லில் இருக்­கும்.

வரி சலுகை :
இதன்­படி, பி.பி.எப்., எனப்­படும் பொது சேம­நல நிதி திட்ட முத­லீட்­டிற்கு, வட்டி, 7.60 சத­வீ­தத்­தில் இருந்து, 8 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.ஐந்து ஆண்­டு­களில் முதிர்ச்சி அடை­யும், மூத்த குடி­மக்­கள் சேமிப்பு திட்­டத்­திற்கு, வட்டி, 8.3ல் இருந்து, 8.7 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அது­போல, 1 – 5 ஆண்­டு­கள் வரை­யி­லான வைப்பு நிதி திட்­டங்­க­ளுக்­கும், வட்டி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அஞ்­ச­லக சேமிப்­பிற்­கான வட்டி, 4 சத­வீ­தம் என்ற அள­வில் மாற்­ற­மின்றி உள்­ளது. சிறு­சே­மிப்பு திட்­டங்­களில் செய்­யும் முத­லீ­டு­க­ளுக்கு, வரு­மான வரி சட்­டத்­தின் கீழ், வரிச் சலுகை கிடைக்­கிறது. அத­னால், இந்த திட்­டங்­க­ளுக்கு, அரசு மற்­றும் மாத ஊதி­யம் பெறும் ஊழி­யர்­க­ளி­டம் வர­வேற்பு காணப்­ப­டு­கிறது.

பொது சேம நல நிதி­யில், முதிர்வு காலத்­திற்கு பின் பெறும் தொகைக்கு, வரி விலக்­கும் அளிக்­கப்­ப­டு­கிறது. இம்­மாத நில­வ­ரப்­படி, ‘கிசான் விகாஸ்’ சேமிப்பு பத்­தி­ரத்­தில் செய்­யும் முத­லீடு, 118 மாதங்­களில் இரு மடங்­காக பெரு­கும். அடுத்த மாதம், இதே திட்­டத்­தில் முத­லீடு செய்­தால், 112 மாதங்­க­ளி­லேயே முதிர்ச்சி தொகையை பெற­லாம்.
வட்டி விகி­தம் (2018)
திட்­டம் ஜூலை – செப்., அக்., – டிச., அஞ்­ச­லக சேமிப்பு 4.00 4.001 ஆண்டு டிபா­சிட் 6.60 6.902 ஆண்டு டிபா­சிட் 6.70 7.003 ஆண்டு டிபா­சிட் 6.90 7.205 ஆண்டு டிபா­சிட் 7.40 7.805 ஆண்டு தொடர் வைப்பு 6.90 7.305 ஆண்டு மாத வரு­வாய் திட்­டம் 7.30 7.705 ஆண்டு தேசிய சேமிப்பு பத்­தி­ரம் 7.60 8.00பொது சேம­நல நிதி 7.60 8.00கிசான் விகாஸ் பத்­தி­ரம் 7.30 (முதிர்வு: 9.10 ஆண்டு) 7.70 (முதிர்வு: 9.4 ஆண்டு)சுகன்ய சம்­ரிதி திட்­டம் 8.10 8.50

மூலக்கதை